search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க தமிழ்ச்செல்வன்"

    • பொய் சொல்வதை முதலில் நிறுத்துங்கள் என்றும் நிர்வாகிகளை கடிந்து கொண்டார்.
    • தேனி தொகுதியில் போட்டி கடுமையானதாக இருக்கும் என்பது கட்சியினர் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பிரசாரங்களும்களை கட்டி வருகிறது.

    2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதி தேனி ஆகும்.

    இந்த தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டார்.

    2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்செல்வனும், அதிமுக சார்பில் நாராயணசாமியும், அமமுக சார்பில் டிடிவி தினகரனும், நாம் தமிழர் சார்பில் மதன் ஜெயபாலும் வேட்பாளர்களாக களம் இறங்குகிறார்கள். இதை தொடர்ந்து இந்த முறையும் தேனி தொகுதியில் போட்டி கடுமையானதாக இருக்கும் என்பது கட்சியினர் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் மதுரை அலங்காநல்லூரில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தி.முக. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது,

    திமுக பாராளுமன்ற தேர்தலில் தேனி மாவட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற வேண்டும் என்றும், அதிகப்படியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்றால் தனது பதவியை அடுத்த நாளே ராஜினாமா செய்கிறேன் என்று கூறினார்.

    நிர்வாகிகள் கூட்டத்தில் வெளியில் இருந்து பெண்களை அழைத்து வந்ததை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் மூர்த்தி செல்போனில் அரசியல் தேவையில்லை என்றும், மக்களை நேரில் சந்தியுங்கள் என்றும், செல்போனில் அரசியல் செய்தால் எப்படி உருப்படும் என்றும், பொய் சொல்வதை முதலில் நிறுத்துங்கள் என்றும் நிர்வாகிகளை கடிந்து கொண்டார்.

    • தங்க தமிழ்ச்செல்வனுடன் பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணக்குமாரும் உடன் சென்றார்.
    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத்தை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரியகுளம்:

    பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தனது மகள் திருமணத்துக்கான அழைப்பிதழ் கொடுக்க அவரது வீட்டிற்கு சென்றார்.

    தங்க தமிழ்ச்செல்வத்தின் மகள் டாக்டர் சாந்திக்கும், சுப்பிரமணியனுக்கும் வருகிற 20-ந்தேதி திருமணம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருமண அழைப்பிதழை வழங்க தங்க தமிழ்ச்செல்வன் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றார். அவரை ஓ.பன்னீர்செல்வம் இன்முகத்துடன் வரவேற்றார்.

    தங்க தமிழ்ச்செல்வனுடன் பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணக்குமாரும் உடன் சென்றார். அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும் மகள் திருமணத்துக்காக ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு தங்க தமிழ்ச்செல்வன் சென்றது இரு கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத்தை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 6-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு, ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு அளித்தது.
    • சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதால் அதுவரை இத்தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    சென்னை:

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அத்தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வேட்பு மனுவில் சொத்துக்கள், வங்கி கடன் போன்ற விவரங்களை ரவீந்திரநாத் மறைத்துள்ளார் என்றும் பணப்பட்டுவாடா செய்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கில் கடந்த 6-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு, ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதால் அதுவரை இத்தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதைஏற்று தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்ற ஐகோர்ட்டு உத்தரவு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க.வை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    அதில், ரவீந்திரநாத் மேல் முறையீடு வழக்கில், தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று அம்மனுவில் தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்து உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 15 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் போடிக்கு எந்தஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை.
    • கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட ரூ.500 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் போடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற ஞாயிற்றுக்கிழமை போடியில் ரூ.100 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள முல்லை பெரியாறு-கொட்டக்குடி கூட்டுகுடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்க அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் போடிக்கு வருகை தருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் குடிநீர் பிரச்சினையில் தன்னிறைவு அடையும். போடி சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அழைப்பு விடுக்கப்படும். அவர் வருவதும், வராமல் இருப்பதும் அவருடைய தனிப்பட்ட விருப்பம்.

    போடி எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற பிறகு அவர் எத்தனை முறை ஊருக்கு வந்து மக்களை சந்தித்துள்ளார் என்பது இப்பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்றுப்போன நான்தான் அடிக்கடி போடி தொகுதிக்கு வந்து மக்கள் நலத்திட்டங்களை பார்வையிட்டு செயல்படுத்தி வருகிறேன்.

    15 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் போடிக்கு எந்தஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை. தற்போது அவர் கேரளாவில் ஆயில் மசாஜ் எடுத்து வருகிறார். கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட ரூ.500 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணி தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×